ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

vahaabiya sadi


வஹ்ஹாபிய வஞ்சகம்  மௌ லான  முஹம்மது அலி ஜௌஹர்  தொளுரித்துகாட்டிய  
இப்னு  சுஊதின்  துரோகம் 
 ( முடியாட்சி !) 
 1926 ஆம்  ஆண்டு மக்காவில் மன்னர்  இப்னு   சுஊதினால்  கூட்டப்பட்ட  உலக முஸ்லிம்கள் மாநாட்டிற்கு 
மௌலானா  முஹம்மது  ஜௌ ஹர்  அவர்கள்  இந்திய முஸ்லிம்களின் பிரதி நிதியாக சென்றார்  அம்மகா நாட்டில் 
கலந்து கொள்ளப் புறப்படும் சமயம்  மௌ லான  தமது ''ஹம்தர்து ''' பத்திரிக்கையில் பின்வருமாறு  எழுதினார் 
நீண்ட கட்டுரை  சுருக்கி இருக்கிறோம் .
குரானின்  போதனா தத்துவங்களை சரிவர விளங்கிக் கொள்ள சக்தியற்ற ஒரு கூட்டத்தினர் -சீர் திருத்தக்காரர் 
களென்று  கூறிக் கொள்பவர்கள் -இஸ்லாமிய ஞாபகார்த்தச் சின்னங்களை இடித்து த்தகர்தெரிந்து பெரிதும் 
வருந்தத்தக்க விஷயமாகும் ''' வஹ்ஹாபி '' இயக்கத்தைத் தோற்றுவித்த  முஹம்மதிப்னு  அப்துல் வஹ்ஹாப் 
கபுருகளை  இடிப்பது கொண்டும்  குப்பாக்களை உடைப்பது கொண்டும் இஸ்லாத்தின் ஏகத்துவ த்தை 
உலகில்  நிலை  நிறுத்தி விடலாமென்று  நினைக்கிறார்  ஆனால்  இங்ஙனம்  மகான்களின்  சமாதிகளில் 
மரியாதை  செலுத்துவதைக் கண்டிக்கும்  இத்தகையோரின்  நடவடிக்கைகளைக்  கவனிக்கும் போது உலக 
மன்னர்கள் முன்பாக  வரம்பு மீறிய  மரியாதை செய்யக்கூடியவர் களாகத் தான் அவர்கள் காணப்படுகிறார்கள் 

 ௨) கப்ருகளை  உடைப்பதற்காக  இஸ்லாம் தோன்றவில்லை பிர்ஒளன்   தன்மையையும்  மன்னர் பதவிகளையும் 
குழி தோண்டி புதைப்பதற் காகவே  இஸ்லாம்  உலகில் தோன்றியதென்பதை இவர்கள் உணர்ந்தார்களில்லை
 இஸ்லாத்துக்காகத்  தொன்றாற்றி யாவர்களது  கபுருகள்  மார்க்கத்துக்காக தியாகஞ்செய்த  ஷுஹதாக்களின் 
 ரவுலா ஷரீபுகள் ஆகிய சின்னங்கள் பித் அத்தாம்  அவை கூடாதென்று  தகர்த்து விட்டனர்  பிது அத் கூடாதென்று 
ஞாபக சின்னங்களை   தகத்தவர்கள் இன்று   பிது அத்தான வற்றை (சிலைகளை ) உறை போட்டு மூடி  அழியா 
வண்ணம்  பாதுகாத்து வருவது விவேகமா ? இது முனாபிக் தனமல்லவா ? அதோ  பாருங்கள்   தகரத் தொப்பிகளால் 
மூடப்பட்டிருக்கும் விக்கிரகங்களை ! (தண்ணீர் விடும் யானை ,ஒட்டகை ,குதிரை ,சிங்கம் ,போன்ற கற்சிலை கள்!)
 மனிதக்கண்களைத்தான் மறைக்கலாம்  ஆண்டவனது  பார்வையை  மறைக்க முடியுமா ?
 இவ்வாறு வீர கர்ஜனை செய்து தம்  இடத்திலமர்ந்தார்  இஸ்லாமிய  வீரனின்  சொல்லம்புக்கு இலக்கான 
இப்னு  ஸூ ஊது  வெட்கித்தலை குனிந்தவராய்  யாரும் அறியாவண்ணம்  பின்புறமாக  வெளியேறி சென்றுவிட்டார் !
 சுல்தானே   வாக்கு  மாறியவர் ! ஜியாத்தை தடுக்கும்  பொருட்டு கபுருகளைத் தகர்த்தவர் ! திரும்பக்கட்டி  கொடுப்பதாக 
 உறுதி கூறி  பிறகு  மாற்றஞ் செய்தவர்  அவருக்கு ஒருவர் நியாத்தை  எடுத்தோத  முயன்றால்  அவரது  சீற்றத்துக்கு 
 ஆளாவது நிச்சயம்  ஆனால் அவரது அடாத செயல்களை கண்டிக்காது விடின் துர்க்கிருத்தியங்கள்  மேன் மேலும் 
நடை பெற்றுக் கொண்டே போகுமல்லவா ? 

 நன்றி  மௌலானா  முஹம்மது அலி ஜெள ஹர்'''' பயனீர் 
பப்ளிஷிங்  ஹவுஸ்  (1988 ) தொகுப்பு  ஹிஸ்டாரியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக